பக்தியின் பல வகைகள்
இன்று காசி வருகையின் இரண்டாம் நாள். தீரஜ் அவர்கள் காலை 4.30க்கு தயாராகி விடுதியின் வெளியே வந்து நிற்கச்சொன்னார். “காலை சீக்கிரம் கிளம்பி கோயில்களை தரிசனம் செய்து வந்துவிட்டால் சரியாக இருக்கும். 7 மணி ஆகிவிட்டால் கூட்டம் தாள முடியாது” என்றார். 3.00 மணிக்கு எழுந்து மறுபடியும் தேனீரைத் தேடி வெளியே வந்தேன். இரவு முழுவதும் விழித்திருந்த காசி நகரம் காலை 3 மணிக்கு அமைதியே உறுவாக இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஒரு முதியவர் சிறிய கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேனீர் கொதிக்க வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று தேனீர் கேட்டேன். “தமிழரா ?” என்று கேட்டார். “ஆம்” என்றேன். “பில்டர் காபி இருக்கு. வேண்டுமா ?” என்று ஹிந்தியில் கேட்டார். என் கையில் 50 ரூபாய் தான் வைத்திருந்தேன். தேனீர் 15 ரூபாய் , பில்டர் காபி 25 ரூபாய். மூன்று தேனீர் போதும் என்றேன். பிளாஸ்டிக் கவர் ஒன்றை எடுத்து அதில் தேனீரை ஊற்றிக் கொடுத்தார். தேனீர் குடித்து , குளித்து தயாராகி கிளம்பிவிட்டோம். அதே குறுகலான சந்துகள் , அதே ஆட்டோ , குண்டும் குழியுமான சாலைகளில் ஆட்டோ தூக்கி தூக்கி...