அக ஒளி பரவல்
நேற்று ரூசக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காலையில் 9 மணிக்கு ரூசக் நிறுவன அலுவலகத்தை அடைந்தபோது அந்த இடமே அமைதியாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் தான் அங்கு நிலவியிருந்த பரபரப்பு புலப்பட்டது. பணியாளர்கள் சிறு சிறு கூட்டங்களாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. வருடம் ஒரு முறை எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் நாள். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே நிறத்தில் சேலை எடுத்துத் தரப்பட்டிருந்தது. பளபளக்கும் புதிய சேலை யும் , அவரவர் விருப்பதிற்கேற்ற நகை , ஆபரணங்களும் , பூவும் சூடிக்கொண்டு , மகிழ்ச்சியாக உரத்த குரலில் பேசிக்கோண்டும் , ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டும் கலகலப்பாக இருந்தது. நேரம் 10.30 இருக்கும் , நிகழ்ச்சி தொடங்கியது. குத்துவிளக்கேற்றி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்க 11 ஆகிவிட்டது. முதலில் கிராமத்துப் பெண்கள் மேடை ஏறி சிறு நாடகங்கள் நடித்துக் காட்டினர். அதில் ஒரு கிராமத்தின் நாடகம் மிகச் சிறப்பாக இருந்த...