Skip to main content

வார்த்தைகளைக் குறை; செயல்களை அதிகம் செய்

Anger - Advice | Headspace

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் வெப்ப நிலை ஏறுவது போலவே மக்களின் கோபமும் சற்று அதிகரித்துத் தான் தெரிகிறது. தினமும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இரயிலிலும் சரிபேருந்திலும் சரிகோபமான வார்த்தைகள் அதிகம் பரிமாரிக்கொள்ளப்படுகின்றன. சில நேரங்களில் கைகலப்பு கூட ஏற்பட்டுவிடுகிறது. இந்த கோடை காலக் கோபத்திற்கு நானும் எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல. இப்பொழுதெல்லாம் எனக்கும் சற்று கோபம் அதிகமாகத் தான் வந்துவிடுகிறது. நேற்று மருத்துவமனையில் கோபம் தாங்க முடியவில்லை. எங்காவது கோபம் பொங்கி வெடித்துவிடப் போகிறதே என்று சற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஓய்வு அறையில் கொஞ்சம் சில்லென்ற தண்ணீரை குடித்துக்கொண்டு ஒளிந்து கொண்டுவிட்டேன். 10-15 நிமிடங்களுக்குப் பின் தான் வெளியே வந்து மறுபடியும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தேன். 

 

நேற்று என் கோபத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள். காலையில் கிளம்பும் அவசரத்தில் தெரியாமல் தடியான ஒரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பிவிட்டேன். இரயிலிலும்பேருந்திலும் சென்று மருத்துவமனையை அடையும் முன்பே வியர்த்து விருவிருத்து ஓய்ந்து போய்விட்டேன். அதுமட்டுமில்லாமல் காலைச் சிற்றுண்டி சாப்பிடும்போது குழம்பு மிகவும் காரமாக இருந்துவிட்டது. இதெல்லாம் கோபத்திற்குக் காரணமாகுமா என்று கேட்கலாம்தவறில்லை. இது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். எனக்கே தெரியாமல் வேறு காரணங்களும் இருக்கலாம். ஆழ் மனதில் இருக்கும் குழப்பங்களும்தீராத முரண்பாடுகளும் கூட சில நேரங்களில் கோபமாக வெளிப்படலாம். வாழ்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது இயலாமையில் மாட்டிக்கொண்டு நின்றிருந்தால் கூட அது கோபமாக வெளிப்படலாம். இப்படிப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. ஆனால் அதை ஆமோதிக்காத நான்’ என்ற உணர்வு சட்டையையும்காரமான குழம்பையும் சாக்காக சொல்லிக்கொண்டிருக்கிறது. இப்படியே கோபமாக நேற்றைய பொழுது முடிந்தது. இன்று காலை எழுந்தபோதும் அதே கோபம் சற்று மேலோங்கி இருந்ததை உணர்ந்தேன். ஆனால் கோபம் இருக்கிறது என்ற நிலையைக் கூட என் மனது ஒப்புக்கொள்ளவில்லைஅதனால் அதைக் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவாக இரண்டு விஷயங்கள் இன்று செய்தேன். அந்த இரண்டு விஷயங்களைச் செய்ததால் மிகவும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. கோபத்தைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்த இரண்டு விஷயங்களைச் செய்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. 

 

இரண்டு மாதங்களாக முன்னாள் நண்பர் ஒருவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தை நின்றுவிட்டது. மனக்கசப்பு அதிகமாக இருந்ததால் அவருடன் இனி நட்பு பாராட்டுவதால் எனக்குத் தான் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று உணர்ந்து தள்ளிச் சென்று விட முடிவெடுத்திருந்தேன். இன்று காலையில் நாங்கள் இருவரும் பங்கு கொள்ளும் ஒரு நிகழ்வைப் பற்றி பேசவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் வழக்கமாக அவரை பெயர் சொல்லி அழைப்பது போல் இல்லாமல் மரியாதையாக அழைத்தேன். அப்படி மரியாதையாக அழைத்தது அவர் மனதைப் புண்படுத்திவிட்டது. இப்படி மனம் புண்படும்படி பேசவேண்டாம் என்று அவர் கூற. என் மன நிலையைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத் தான் நான் அப்படி மரியாதையாக அழைக்கிறேன், உங்கள் மன நிலையைப் புண்படுத்துவதற்காக அல்ல என்று நான் பதிலளிக்கவார்த்தைகள் வளர்ந்துகொண்டே போய் மனக்கசப்பில் சென்று முடிந்தது. இந்த நிகழ்வு முடிந்த பின் அப்படி அவரை வேறு விதமாக மரியாதையாக அழைத்திருக்கவேண்டாமோ என்று தோன்றியது. 

 

ஒரு சில மூத்த ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கான பயிற்சித் திட்டம் மற்றும் கையேடு ஒன்றை தயார் செய்வதில் இப்போது ஈடுபட்டுள்ளேன். அதில் ஆங்கிலத்தில் பாடத் திட்டங்களை தயார் செய்திவிட்டோம். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற ஆசிரியர்கள் தாம் மொழிபெயர்த்த பாடங்களை என்னுடன் இன்று பகிர்ந்து கொண்டார்கள். அவற்றை வாசித்து அவற்றில் திருத்தங்கள் தேவையா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் பாட திட்டத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே அதிர்ச்சி ஏற்பட்டது. தமிழில் இருந்த பாடத்திட்டத்தில் அர்த்தமே இல்லை. வார்த்தைகளின் கோர்வை உள்ளதே தவிற அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தி இருப்பார்கள் என்று தெரிந்தது. ஆங்கிலத்தில் இருந்த பாடத் திட்டத்தை அப்படியே எடுத்து கூகிள் மொழிபெயர்ப்பு செயலியில் செலுத்தி அதில் வந்த தமிழ் பாடத்திட்டத்தை அனுப்பி இருந்தார்கள். அதை அனுப்புவதற்கு முன் அதை அவர்கள் படிக்கவே இல்லை என்று தோன்றியது. சரிகொஞ்சம் தானே நாமே திருத்திவிடலாம் என்று திருத்தத் தொடங்கினால்ஒவ்வொரு வாக்கியத்திலும் திருத்தங்கள். ஒரு பாடத் திட்டத்தை முழுவதுமாக திருத்தவே 2 மணி நேரம் ஆகிவிட்டது. முழுவதுமாக மொழிபெயர்க்கவே 3-4 மணி நேரம் தான் ஆகும்திருத்துவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதே என்று கோபம் வர ஆரம்பித்தது. சரிஇந்த தவறைப் பற்றி அந்த ஆசிரியரிடம் கேட்போம் என்று அவர்களில் ஒருவரிடம் கேட்டால், “நான் எல்லாம் படித்துத் திருத்தித் தான் அனுப்பியிருக்கிறேன்” என்று பதிலளித்தார். அதற்கு முன் கூட கொஞ்சம் கோபம் தான் இருந்ததுஅவர் அப்படி சொன்னதும் கோபம் தலைக்கு ஏறிவிட்டது. கோபம் மிகவும் அதிகமாகி “இப்படி தவறான மொழிபெயர்ப்பை அனுப்ப வேண்டாம். என்னால் எல்லாவற்றையும் திருத்த முடியாது. தயவு செய்து சரியாக மொழி பெயர்ப்பு செய்து அனுப்பவும்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். சொன்ன அடுத்த நிமிடமே அப்படி கடுமையாகச் சொல்லியிருக்கக் கூடாதோ என்ற வருத்தம் ஏற்பட்டுவிட்டது.

 

இரண்டு செயல்களும் கோபத்தில் செய்த செயல்கள். அதனால் செய்து முடித்த அடுத்த நொடியே வருத்தப்பட வைத்துவிட்டன. கோபம் அதிகமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்கக்கூடாது. எந்த ஒரு முக்கியமான செயலும் செய்யக் கூடாது என்று அறிவிற்குத் தெரியும். இன்று செய்த இரண்டு செயல்களும் அதை மீறி செய்த செயல்கள். மன வருத்தம் அதிகமானதால் என்னுடைய ஆசான்நலம் விரும்பிவழிகாட்டிதோழி என் அக்காவுடன் பேசினேன். அவள் ஒரே ஒரு வாக்கியம் சொன்னாள். அந்த வாக்கியம் என் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டுவிட்டது. அது மறையாமலும் மறக்காமலும் இருக்க இந்த கட்டுரையை எழுதவேண்டும் என்று முடிவெடித்தேன். “நம் மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் தான் மிகவும் பலவீனமான கருவி. செயல்களில் வெளிப்படுத்தினால் அவை மிகத் தெளிவாகவும் சரியாகவும் வெளிப்படும். பேச்சை குறைசெயல்களில் காட்டு.” எவ்வளவு நேர்த்தியான அறிவுறை! சிந்தித்துப் பார்க்கிறேன்என் அக்காவின் சிந்தனைத் தெளிவை எண்ணி வியக்கிறேன். 

 

முதல் சூழ்நிலையில் முன்னாள் நண்பரிடம் அவரை விட்டு நான் விலகிச் செல்கிறேன் என்று சொற்களில் சொல்லவேண்டிய அவசியம் என்னஅவரை மரியாதை கொண்ட வார்த்தைகளால் மாற்றி அழைக்கவேண்டிய தேவை என்னஅமைதியாக என் வேலையைப் பார்த்துக்கொண்டு என் மன அமைதியை கவனித்துக்கொண்டு நான் இருந்திருந்தாலே போதுமே. அது அவருக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்குமே. தேவை இல்லாத நாடகம் ஒன்றை கோபத்தால் நடத்திவிட்டேன். வார்த்தைகளில் சொல்லாவிட்டால் அவருக்கு அது புரியாமல் போய்விடப் போகிறதே என்ற தயக்கம். அதை அவர் வேறு விதமாகப் புரிந்துகொண்டுவிடப் போகிறாரே என்ற பயம். திட்டவட்டமாகச் சொல்லிப் புரியவைத்துவிடவேண்டும் என்ற எண்ணம். அவரும் மனம் வருத்தப்படட்டுமே என்ற தீய எண்ணம் கூட இதில் இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் என் ஆழ் மனதிற்கே இனி நாங்கள் நண்பர்கள் இல்லை’ என்று சொல்லிக்கொள்ளவேண்டிய குழப்ப நிலையும் இருந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன். இப்போது சிந்தித்துப் பார்த்தால் அந்த வார்த்தைகள் தேவையே இல்லை. அவருடன் இனி நட்பு பாராட்டப் போவதில்லை என்று மனதளவில் தெளிவாக முடிவெடுத்துவிட்டால் அது என் நடத்தையிலேயே தெளிவாக வெளிப்பட்டுவிடும். வார்த்தைகள் தேவை இல்லை. இது தான் அக்கா சொன்னது. 

 

இரண்டாம் சூழ்நிலையிலும் நான் பயன்படுத்திய வார்த்தைகள் தேவை இல்லை. இப்படியெல்லம் தவறாக மொழிபெயர்ப்பு செய்யவேண்டாம். சரியாக செய்து அனுப்புங்கள் என்ற வாக்கியம் எதற்கு? அதற்கு பதிலாக இந்த இந்த இடங்களில் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கவும் என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் எல்லோரும் ஆசிரியர்கள். அவர்கள் மொழியில் வல்லுனர்கள் அல்ல. அவர்களுக்கு மொழிபெயர்ப்பு அனுபவமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் மொழிபெயர்ப்பு சரியாகத் தெரியவேண்டும் என்ற எதிர்பார்ப்பே தவறானது என்று இப்போது தோன்றுகிறது. ஒருவேளை அவர்களின் தவறான மொழி பெயர்ப்புகளை நானே சரியாக செய்து காட்டியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்குமோஎதற்கு இத்தனை கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் என்று இப்போது தோன்றுகிறது. என் அக்கா சொன்னது தான் மறுபடியும் நெத்தியில் வந்து இடிக்கிறது. “வார்த்தைகளை குறைசெயல்களை அதிகம் செய்” இன்று இந்த இரண்டு நிகழ்வுகளும் வாழ்கையின் முக்கியமான பாடம் ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. வார்த்தைகளுக்கு இல்லாத பலம் பல நேரங்களில் செயல்களுக்கு இருக்கும். செயல் வீரர்களாக நம்மை நாம் உறுவாக்கிக்கொண்டால் வாழ்கையில் கசப்பான சூழ்நிலைகள் குறையலாம். 

Comments

Popular posts from this blog

Tribute to the kindest man I have seen

I was not feeling very well yesterday. It has been this long-drawn cough, cold which had morphed itself into a sinusitis and headache. As soon as I wound up clinic around 1.30 PM, I decided to leave for home. My friend, a physiotherapist had come to clinic and whenever he comes, I hitch a pillion ride on his motorbike till Chengalpet from where I take the train home. But yesterday was not a routine day. Early in the morning, I got a call from the wife of one of my long-term patients and good friend. He had been fighting for life in a critical care unit with complications of chronic kidney disease for more than a week now. He passed away early yesterday morning. This was running in my mind throughout the day. I was conflicted between going to to their home and going home to get some rest. I decided I will go home. I got on to my friend’s motorbike and almost reached Chengalpet. Throughout the ride all I could think of was the man who had passed on and his family. So somewhere just befor...

Misappropriation versus Representation

I am writing this blog after a long time. This hiatus is because of a mental health set-back. I am trying to recover and get back into a routine. I am grateful to some of my readers who remembered and asked me specifically why I haven’t been writing. Thank you for your trust and your patience.   When I used to be a teacher in a medical college, one of my favorite classes used to be an interactive narrative session on caste as a determinant of health. My work with RUWSEC, a Dalit women’s organization over the past 15 years has given me significant insights into caste as a major determinant of health, wellness, illness, and treatment seeking behavior. I used to share stories from the things I have seen and heard during my work in RUWSEC. I vividly remember one of the classes in late 2023. It was a class of first year medical students. I was talking to them about the story of how I was dressing the wound over the foot of a patient. The patient belonged to Dalit community and when I we...

Injustice bites

  “I thought God dealt me a raw deal with diabetes and high BP. Not just that. He constantly beats and pushes me down. I am the unluckiest person on earth” Mr. K lamented at the close of our clinical encounter. It was Mr. K’s first visit to our clinic. I see patients in the clinic on Mondays and Fridays and it was a Monday morning. There were not many patients waiting and so we had some time to talk. After obtaining clinical information from him, we were discussing about his life.     Mr. K recently retired as a clerk from the registrar’s office. He worked there for more than 25 years. Registrar’s offices are fertile grounds for corruption and bribe. “On an average day we would earn 14-15 lakh rupees in bribes for land registrations” Mr. K did not even bat an eyelid when he said this. This amount is way more than my annual income, and I struggled hard to keep my jaw from dropping.    “The sub-registrar would make all the collections and put them in a cloth bag. ...